தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காமராஜ் நகர் தொகுதியில் மார்ட்டினுக்கு உற்சாக வரவேற்பு

 காமராஜ் நகர் தொகுதியில் மார்ட்டினுக்கு உற்சாக வரவேற்பு

 காமராஜ் நகர் தொகுதியில் மார்ட்டினுக்கு உற்சாக வரவேற்பு


ADDED : ஏப் 03, 2026 05:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2026 05:33 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதியில் ஓட்டு கேட்டு சென்ற ல.ஜ.க., வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினுக்கு அப்பகுதி மக்கள் பரிவட்டம் கட்டி வரவேற்பு அளித்தனர்.

காமராஜ் நகர் தொகுதி ல.ஜ.க., வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று சங்கரதாஸ் நகர் ஜெயராஜ் தெருவில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.

அப்போது அப்பகுதியைச் சேர்ந்த வெற்றிவேல் மற்றும் அவரது மனைவி உமாமகேஷ்வரி தம்பதியினர், பரிவட்டம் கட்டி வரவேற்றறனர். இளைஞர்கள் வேலைவாய்ப்பு, விளையாட்டு வசதிகள் போன்ற தேவைகளை முன்வைத்தனர்.

தொடர்ந்து, வேட்பாளர் தொகுதி மக்களுடன் கலந்துரையாடி தொகுதியில் நிலவும் குடிநீர், சாலை வசதி, கழிவுநீர் வடிகால், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், தாம் தேர்ந்தெடுக்கப்பட்டால் இவ்வாறான பிரச்னைகளை முன்னுரிமையுடன் தீர்ப்பதாக உறுதியளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us