ADDED : ஏப் 27, 2026 09:55 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் தியாகி அன்சாரி துரைசாமி நினைவு தினம் ஏப்ரல் 27 ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி மகாத்மா காந்தி வீதி - சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில், அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் சுரேஷ்ராஜ், தியாகி அன்சாரி துரைசாமி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
