/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
யோகா போட்டியில் மாருதி பள்ளி சாதனை
/
யோகா போட்டியில் மாருதி பள்ளி சாதனை
ADDED : பிப் 12, 2026 04:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சர்வதேச யோகா போட்டியில், புதுச்சேரி மாருதி மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர்.
சர்வதே யோகா போட்டி, பெங்களூருவில் நடந்தது. இந்த போட்டியில், புதுச்சேரி லாஸ்பேட்டை மாருதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதில், 8ம் வகுப்பு பயிலும் மாணவி, சம்யுக்தா, இரண்டு பிரிவுகளில் முதலிடம் மற்றும் இரண்டாமிடத்தையும் பிடித்தார்.
அதே பள்ளியில் படிக்கும் 6ம் வகுப்பு மாணவி, மோகனப்பிரியா, மூன்று பிரிவுகளில் இரண்டாமிடத்தையும் பிடித்து சாதனை படைத்தனர்.வெற்றிப்பெற்ற மாணவிகள் பள்ளி சார்பில், பாராட்டப்பட்டனர்.

