/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாருதி சுசுகி புதிய மாடல் கார் அறிமுகம்
/
மாருதி சுசுகி புதிய மாடல் கார் அறிமுகம்
ADDED : அக் 16, 2025 02:22 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாருதி சுசுகி டீலர் செண்பகா கார்ஸ், விக்டோரிஸ் காட் இட் ஆல் புதிய மாடல் காரை அறிமுகப்படுத்தியது.
புதுச்சேரி மாருதி சுசுகி டீலர் செண்பகா கார்ஸ் நிறுவனம், புதிய மாடல் விக்டோரிஸ் காட் இட் காரை புதுச்சேரி ராக் பீச், காந்தி சிலை எதிரில் முதல்வர் ரங்கசாமி, மாருதி ரீஜினல் மேலாளர் பரத் சம்பத் மற்றும் டி.எஸ்.எம்., ஆகியோர் குத்துவிளக்கேற்றி அறிமுகப்படுத்தி வைத்தனர்.
விழாவில், அரசியல் பிரமுகர்கள், முக்கிய பிரமுகர்கள், வியாபார பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
மாருதி செண்பகா கார்ஸ் மேனேஜிங் டைரக்டர் அசோகன், டைரக்டர் சரவணன் ஆகியோர் வரவேற்று புதிய மாடல் காரின் சிறப்புகள் கூறியதாவது;
புதிய மாடல் விக்டோரிஸ் காட் இட் ஆல் காரில் 10 பிளஸ் சி சேப்டி பியூச்சர்ஸ், அடஸ் லெவல் 2 முதல் முறையாக எம்.எஸ்.ஐ.எல் உள்ளது. 6 ஏர்பேக்ஸ் வசதி, அண்டர்பாடி சி.என்.ஜி., இந்தியாவில் முதன் முறையாக இந்த செக்மண்டில் அமைக்கப் பட்டுள்ளது.
டால்பி அட்மாஸ் தியேட்டர் எபெக்ட் சவுண்ட், 360 டிகிரி கேமரா, வெண்டிலேட்டர் சீட் வசதி மற்றும் பனோரமிக் சன்ரூப் போன்ற 60க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளது.
மேலும் ஸ்பாட் புக்கிங் செய்தவர்களுக்கு சிறப்பு பரிசு அளிக்கப்பட்டது.
மேலும் விபரங்களுக்கு 82200 46180 மற்றும் 82200 46170 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளவும்' என்றனர்.