மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி; புதுச்சேரி தெற்கு அணி அசத்தல் வெற்றி
மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டி; புதுச்சேரி தெற்கு அணி அசத்தல் வெற்றி
ADDED : பிப் 03, 2024 07:37 AM

புதுச்சேரி : மாஸ்டர்ஸ் கிரிக்கெட் போட்டியில், மாகி, காரைக்கால், புதுச்சேரி தெற்கு அணிகள் வெற்றி பெற்றன.
புதுச்சேரி மாவட்டங்களுக்கு இடையிலான, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு, கேப் சீசெம் மைதானத்தில் நடக்கும் மாஸ்டர்ஸ் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில், நேற்று காலை 9:15 மணிக்கு, புதுச்சேரி வடக்கு மற்றும் மாகி அணிகள் மோதின.
முதலில் ஆடிய வடக்கு அணி, 10 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 65 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய மாகி அணி, 8.3 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழந்து, 66 ரன்கள் எடுத்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மாகி அணியின் முகமது நிமிஷில் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
காலை 11:45 மணிக்கு நடந்த போட்டியில், காரைக்கால் மற்றும் புதுச்சேரி மேற்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய மேற்கு அணி 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 88 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய காரைக்கால் அணி 8.5 ஓவர்களில், 6 விக்கெட்டுகள் இழந்து, 89 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. காரைக்கால் அணியின் ராஜேஷ், 18 பந்துகளில் 40 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
மதியம் 2:15 தொடங்கிய போட்டியில் ஏனாம் மற்றும் புதுச்சேரி தெற்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய தெற்கு அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 160 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ராகேஷ், 11 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் என, 37 பந்துகளில், 101 ரன்கள் எடுத்தார். அடுத்து ஆடிய, ஏனாம் அணி, 10 ஓவர்களில், 4 விக்கெட்டுகள் இழந்து, 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. புதுச்சேரி தெற்கு அணி, 56 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ராகேஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
