/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் மருத்துவ கல்லுாரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை முதுநிலை மாணவர் 6 மாதம் ' சஸ்பெண்ட் '

ADDED : பிப் 05, 2025 05:48 AM
புதுச்சேரி: தனியார் மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை கொடுத்த முதுநிலை மருத்துவ மாணவர் 6 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுச்சேரி அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லுாரியில் பயிலும் முதுநிலை மாணவர் ஒருவர், எம்.பி.பி.எஸ்., பயிலும் 2 மாணவிகளிடம் ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.மாணவிகள் இருவரும் துறை தலைவரிடம் புகார் அளித்தனர்.
இந்த புகார் மீது கல்லுாரியில் உள்ள பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டி விசா ரித்தது. அதில் முதுநிலை மாணவர் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, முதுநிலை மாணவரை 6 மாதங்கள் சஸ்பெண்ட் செய்து கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.