/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கணித மாதிரி தேர்வு பெத்தி செமினார் பள்ளி முதலிடம்
/
கணித மாதிரி தேர்வு பெத்தி செமினார் பள்ளி முதலிடம்
ADDED : பிப் 05, 2024 05:29 AM

புதுச்சேரி : மாவட்ட அளவிலான, பிளஸ் ௨ மற்றும் பத்தாம் வகுப்பு கணித மாதிரி தேர்வில், பெத்தி செமினார் பள்ளி முதலிடம் பெற்றது.
சீனிவாச ராமானுஜர் கணித அகாடமி சார்பில், புதுச்சேரி, கடலுார் மாவட்ட அளவில், பிளஸ் ௨ மற்றும் பத்தாம் வகுப்பிற்கு ஆண்டுதோறும் கணித மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டில், சமீபத்தில் நடந்த தேர்வில், பங்கு பெற்ற பெத்தி செமினார் பள்ளி முதலிடம் பிடித்தது.
இதன் மூலம் அந்த பள்ளி, ஏழாவது ஆண்டாக தொடர்ந்து முதலிடம் எனும் சாதனையை நிகழ்த்தி உள்ளது.
இதில், சாதனை புரிந்த மாணவர்கள், உறுதுணையாக இருந்த கணித துறை தலைவர் சித்தானந்தம், விரிவுரையாளர்கள் மற்றும் கணித ஆசிரியர்கள் ஆகியோரை பள்ளி முதல்வர் தேவதாஸ் பாராட்டி வாழ்த்தினார்.

