/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பெற்றோர் கண்டிப்பால் எம்.பி.ஏ., மாணவி தற்கொலை
/
பெற்றோர் கண்டிப்பால் எம்.பி.ஏ., மாணவி தற்கொலை
ADDED : மார் 02, 2024 06:22 AM
புதுச்சேரி : சகோதரியின் 5 மாத சீர் சடங்கிற்கு சென்று வந்ததை பெற்றோர் கண்டித்ததால், எம்.பி.ஏ., மாணவி துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி குண்டுப்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் முருகன். பிளம்பர். இவருக்கு ஒரு மகன், சரோஜினி, சரிதா என்கிற இரட்டையர் . இதில் சரிதா குடும்பத்தினரின் சம்மதம் இல்லாமல் கடந்த 2 ஆண்டிற்கு முன்பு லாஸ்பேட்டையைச் சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதனால் முருகன் குடும்பத்தினர் மூத்த மகளிடம் பேச்சுவார்தையை நிறுத்திக்கொண்டனர்.
இரண்டாவது மகள் சரோஜினி, 22; தனியார் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டு, தொலைதுார கல்வியில் எம்.பி.ஏ. படித்து வந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 28 ம் தேதி கருவுற்ற சரிதாவிற்கு 5 மாத சீர் நடந்தது. இதில் சரோஜினி, கலந்துகொண்டது முருகனுக்கு தற்போது தெரியவந்தது.
இதனால் முருகன் மற்றும் அவரது மனைவி மலர் இருவரும், சரோஜினியை கண்டித்தனர். மேலும் கோபமடைந்த முருகன் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினார். பின் முருகனை அவரது குடும்பத்தினர் சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.
தந்தை வீட்டை விட்டு சென்றதால் மனமுடைந்த சரோஜினி நேற்று முன்தினம் இரவு தனது அறைக்கு சென்று துாக்கிட்டுக்கொண்டார்.
சத்தம் கேட்டு முருகன் மற்றும் குடும்பத்தினர் மகளை மீட்டு கதிர்காமம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். டாக்டர் பரிசோதனையில் சரோஜினி வரும் வழியிலே இறந்தது தெரியவந்தது. கோரிமேடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

