/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.பி.பி.எஸ்., முழு நீட் தேர்ச்சி பட்டியல்... வெளியீடு; விண்ணப்ப விநியோகம் இன்று தெரியும்
/
எம்.பி.பி.எஸ்., முழு நீட் தேர்ச்சி பட்டியல்... வெளியீடு; விண்ணப்ப விநியோகம் இன்று தெரியும்
எம்.பி.பி.எஸ்., முழு நீட் தேர்ச்சி பட்டியல்... வெளியீடு; விண்ணப்ப விநியோகம் இன்று தெரியும்
எம்.பி.பி.எஸ்., முழு நீட் தேர்ச்சி பட்டியல்... வெளியீடு; விண்ணப்ப விநியோகம் இன்று தெரியும்
ADDED : ஜூலை 05, 2025 04:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் முழு தேர்ச்சி பட்டியலையும் சுகாதார துறை வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மற்றும் சித்தா போன்ற இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு அவசியம். இந்தாண்டிற்கான நீட் நுழைவு தேர்வு மே 4ம் தேதி நாடு முழுதும் 5,453 மையங்களில் நடந்தன.
மொத்தம் 22.7 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். புதுச்சேரியில் 8 மையங்கள், காரைக்காலில் 2 மையங்கள், மாகே மற்றும் ஏனாமில் தலா 1 மையங்களில் நீட் நுழைவு தேர்வு நடந்தது. நான்கு பிராந்திய மாணவர்களும் நீட் நுழைவு தேர்வினை ஆர்வமாக எழுதினர்.
நீட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை ஜூன் மாதம் 14ம் தேதி வெளியிட்டது. புதுச்சேரி மாநிலத்தினை பொருத்தவரை, நீட் தேர்வினை எழுத 5,266 மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில், 5,150 பேர் மட்டுமே நீட் தேர்வினை எழுதினர். இதில் 2,639 மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து இருந்தது. தொடர்ந்து மாநில ரீதியாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் பட்டியலை தேசிய தேர்வு முகாமை தயார் செய்து, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் ஒப்படைத்தது.
மத்திய சுகாதார அமைச்சகம், புதுச்சேரி சுகாதார துறையை அழைத்து பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்படைந்தது. இப்போது அனைத்து பரிசீலனைகளும் முடிந்து, புதுச்சேரியில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் முழு தேர்ச்சி பட்டியலை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநில அளவில் மாணவர் பிரசாந்த் 99.99 பெர்சன்டைல் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 127வது இடத்தை பிடித்துள்ளார்.
கடந்தாண்டு - இந்தாண்டு ஒப்பீடு
கடந்தாண்டு 600 மதிப்பெண்ணிற்கு மேல் 48 மாணவர்கள் எடுத்து இருந்தனர். இந்தாண்டு நான்கு பேர் மட்டுமே 600 மதிப்பெண் மட்டுமே எடுத்துள்ளனர். கடந்தாண்டு 500 மதிப்பெண்ணிற்கு மேல் 192 மாணவர்கள் மதிப்பெண் எடுத்திருக்க இந்தாண்டு வெறும் 56 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர்.
கடந்தாண்டு 400 மதிப்பெண்ணிற்கு மேல் 509 மாணவர்கள் எடுத்திருக்க, இந்தாண்டு 317 பேர் மட்டுமே எடுத்துள்ளனர். 300 மதிப்பெண்ணிற்கு மேல் கடந்தாண்டு 1039 பேர் எடுத்திருந்த நிலையில் இந்தாண்டு 870 பேர் மட்டுமே எடுத்துள்ளனர்.
கட் ஆப் குறையும்:
பொதுவாக மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுக்கும்போது மருத்துவ படிப்பில் சேர கடும் போட்டி இருக்கும். நுாலிழையில் டாக்டர் கனவு தகர்ந்துபோய்விடும். ஆனால் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ள சூழ்நிலையில் இந்தாண்டு எம்.பி.பி.எஸ்., மருத்துவ படிப்பிற்கு கட் ஆப் குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
'நீட்' படிப்புகளுக்கு முழு தேர்ச்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதால் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட அனைத்து மருத்துவ படிப்புகளுக்கும் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகம் செய்ய சென்டாக் முடிவு செய்துள்ளது. நீட் விண்ணப்ப விநியோகம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்று வெளியாகிறது.