/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தி எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கீடு
/
மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தி எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கீடு
மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தி எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கீடு
மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தி எம்.பி.பி.எஸ்., சீட் ஒதுக்கீடு
ADDED : அக் 22, 2024 05:39 AM
புதுச்சேரி: எம்.பி.பி.எஸ்., பல், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்டாக் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான படிப்புகளுக்கு, மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடத்த கடந்த 15ம் தேதி வரை பதிவு கட்டணம் பெறப்பட்டது.
தொடர்ந்து, மூன்றாம் கட்ட கலந்தாய்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் பட்டியல் ரெடியாகி, அவர்களிடமிருந்து ஆட்சேபனைகளும் பெறப்பட்டன. அதனை தொடர்ந்து நேற்று மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆயுர்வேதம், கால்நடை மருத்துவம் படிப்புகளில் சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கிடு, சிறுபான்மையினர் இடங்கள், என்.ஆர்.ஐ., சுய நிதி இடங்கள் என தனித்தனியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சீட் ஒதுக்கீடு சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சீட் கிடைத்த மாணவர்கள் நாளை (23ம் தேதி) மாலை 5:00 மணிக்குள் அந்தந்த கல்லுாரிகளில் சேர வேண்டும். சேர்க்கையின்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் சமர்பிக்க வேண்டும். என்.ஆர்.ஐ., சீட் பெற்ற மாணவர்கள் காமராஜர் மணிமண்டபத்தில் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அணுக வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு சென்டாக் உதவி எண்-0413265570, 265571 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.