/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.டி., எம்.எஸ்., தரவரிசை பட்டியல் வெளியீடு அரசு - நிர்வாக இடங்களுக்கு 2,093 பேர் போட்டி
/
எம்.டி., எம்.எஸ்., தரவரிசை பட்டியல் வெளியீடு அரசு - நிர்வாக இடங்களுக்கு 2,093 பேர் போட்டி
எம்.டி., எம்.எஸ்., தரவரிசை பட்டியல் வெளியீடு அரசு - நிர்வாக இடங்களுக்கு 2,093 பேர் போட்டி
எம்.டி., எம்.எஸ்., தரவரிசை பட்டியல் வெளியீடு அரசு - நிர்வாக இடங்களுக்கு 2,093 பேர் போட்டி
ADDED : நவ 21, 2024 05:30 AM
புதுச்சேரி: எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 425 பேர், நிர்வாக இடங்களுக்கு 1,668 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்பிற்கு கலந்தாய்வு நடத்திய சென்டாக் அடுத்து எம்.டி., எம்.எஸ்., படிப்பிற்கு முதற்கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்துள்ளது. அதற்கான எம்.டி., எம்.எஸ்., இறுதி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
அரசு ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 415 மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர். இதில் அகில இந்திய அளவில் 305வது இடத்தை பிடித்த மாணவி விசாலி, புதுச்சேரி அரசு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை பட்டியலில், 99.86 பெர்சன்டைல் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்துள்ளார்.
மகேஸ்வரி 99.62 பெர்சன்டைல் மதிப்பெண்ணுடன் இரண்டாம் இடம், ஸ்ரியா சித்தார்த் 99.06 பெர்சன்டைல் மதிப்பெண்ணுடன் மூன்றாம் இடம் பிடித்தனர். அரசு ஒதுக்கீடு ஓ.பி.சி., பிரிவில்-125, எம்.பி.சி.,-131, மீனவர்-16, முஸ்லீம்-11, எஸ்.சி.,-55, எஸ்.டி.,-1, பி.டி.,-1, விடுதலை போராட்ட வீரர் வாரிசு-24, விளையாட்டு வீரர்-10, முன்னாள் ராணுவ வீரர்-5 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
நிர்வாக இடங்களை பொருத்தவரை விக்னேஸ்வர் 98.62 பெர்சன்டைல் மதிப்பெண்ணுடன் முதலிடம் பிடித்தார். நிர்வாக இடங்களுக்கு 1,668 பேர் விண்ணப்பித்தனர். நிர்வாக இடங்களில் தெலுங்கு பேசும் பிரிவினரில் 5 பேர், கிறிஸ்துவ சிறுபான்மையினர் இடங்களுக்கு 5 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
சரியான சான்றிதழ் சமர்ப்பிக்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 92 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதிக்குள் எம்.டி., எம்.எஸ்., முதற்கட்ட கலந்தாய்வுக்கு முன்னுரிமை கொடுக்க சென்டாக் அறிவுறுத்தியுள்ளது.