/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறைச்சி கோழி வேன் கவிழ்ந்து விபத்து
/
இறைச்சி கோழி வேன் கவிழ்ந்து விபத்து
ADDED : மார் 31, 2025 07:44 AM

புதுச்சேரி : திருவாண்டார்கோவில் பைபாசில் இறைச்சி கோழி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
புதுச்சேரியில் இருந்து விழுப்பரத்திற்கு, நேற்று முன்தினம் இரவு 9:45 மணியளவில் இறைச்சி கோழிகளை (பிராய்லர்) ஏற்றிக் கொண்டு டாடா ஏஸ் மினி வேன் சென்று கொண்டிருந்தது. திருவாண்டார்கோவில் பைபாஸ் அருகில் வந்தபோது எதிரே திடீரென வந்த பைக் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை பிரேக் அடித்து நிறுத்த முற்பட்டார்.
அதில் நிலை தடுமாறி வேன் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. தகவலறிந்த வில்லியனுார் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பொதுமக்கள் உதவியுடன் வேனை அப்புறப்படுத்தினர்.
இது தொடர்பாக வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விபத்தால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.