/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் பஸ் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை
/
தனியார் பஸ் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை
ADDED : அக் 21, 2024 05:45 AM
புதுச்சேரி: மேட்டுப்பாளையத்தில் தனியார் பஸ் முன் பாய்ந்து மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்.
நாகப்பட்டினம் மாவட்டம், தர்மதானபுரம் ஆட்டுக்கால் மண்டபத்தைச் சேர்ந்தவர் அரவிந்த்சாமி, 30; மெக்கானிக். இவர் கடந்த 5 மாதங்களாக புதுச்சேரி, மேட்டுப்பாளையம் பகுதியில் தங்கி, துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் வாகனங்களை பழுது நீக்கும் வேலை செய்து வந்தார்.
நேற்று மதியம் 1:00 மணி அளவில் மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அரவிந்த்சாமி, திடீரென அவ்வழியாக வந்த தனியார் பஸ்சின் பின் சக்கரத்தில் பாய்ந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்த மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அரவிந்த்சாமியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். அதில், அரவிந்த்சாமி திருமணமாகவில்லை என்ற ஏக்கத்தில் இருந்ததாகவும், இதுகுறித்து சக ஊழியர்களிடம் அவ்வப்போது கூறி வேதனை அடைந்தது வந்ததும் தெரியவந்தது.
மேலும், அரவிந்த்சாமி தற்கொலை செய்து கொள்ளும்போது போதையில் இருந்ததும் தெரியவந்தது. ஓடும் பஸ்சில் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

