தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்த மெக்கானிக் பலி

மயங்கி விழுந்த மெக்கானிக் பலி

மயங்கி விழுந்த மெக்கானிக் பலி


ADDED : பிப் 01, 2025 05:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2025 05:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: கழிவறையில் மயங்கி விழுந்த மெக்கானிக் பரிதாபமாக இறந்தார்.

கூடப்பாக்கம் புதுநகர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் குமாரவேல், 40; பைக் மெக்கானிக். குடிப்பழக்கம் உள்ள இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்தார். இதனால் மனைவி கலைச்செல்வி கோபித்துக் கொண்டு தாய்வீட்டிற்கு சென்று விட்டார்.

குமாரவேல் அவரது வீட்டில் உள்ள கழிவறையில் நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us