/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வீரர்களுக்கு பதக்கம்
/
புதுச்சேரி வீரர்களுக்கு பதக்கம்
ADDED : பிப் 07, 2025 04:07 AM

பாகூர் : கன்னியாகுமரியில் நடைபெற்ற சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில், புதுச்சேரி வீரர்கள் 5 தங்கம், 22 வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுள்ளனர்.
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் இணைந்து முதலாவது ஓபன் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கன்னியாக்குமரியில் மூன்று நாட்கள் நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் செயலாளர் அன்பு நிலவன், மாநில தலைமை நடுவர் அதியமான் தலைமையில் பங்கேற்ற புதுச்சேரி அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி பதக்கங்களை வென்று மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
அதில், வீரர்கள் 5 தங்கம், 22 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 30 பதக்கங்களை பெற்று சாதனை படைத்தனர்.வெற்றி பெற்ற வீரர்களை புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்க நிர்வாகிகள் பாராட்டி வாழ்த்தினர்.