/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சிலம்ப சங்க வீரர்களுக்கு பதக்கம்
/
புதுச்சேரி சிலம்ப சங்க வீரர்களுக்கு பதக்கம்
ADDED : பிப் 13, 2025 04:52 AM
புதுச்சேரி: கன்னியாகுமரியில் நடந்த, தேசிய சிலம்பம் விளையாட்டு போட்டியில், புதுச்சேரி சிலம்பம் சங்க வீரர்கள் பதக்கங்களை பெற்றனர்.
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரியில், கடந்த15ம் தேதி முதல் 17ம் தேதி வரை சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், புதுச்சேரி சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் சார்பில், 4 வீரர்கள் கலந்து கொண்டனர்.
அதில், ஒரு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கல பதக்கம் பெற்றனர். வெற்றிபெற்ற வீரர்கள் சிலம்பாட்ட கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள், புதுச்சேரி விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் சிலம்பம் மற்றும் அடிமுறை சங்கம் செயலாளர் அன்புநிலவன், சங்க நிர்வாகி சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.