/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தி.மு.க., நிர்வாகிக்கு மருத்துவ நிதியுதவி
/
தி.மு.க., நிர்வாகிக்கு மருத்துவ நிதியுதவி
ADDED : ஜூலை 15, 2025 07:43 AM

புதுச்சேரி : சக்தி நகரில் உடல்நிலை பாதிக்கப்பட்ட தி.மு.க., கிளை அவைத் தலைவருக்கு, கட்சி தலைமையின் மூலம் ரூ.25 ஆயிரம் நிதியுதவிக்கான காசோலையை மாநில அமைப்பாளர் சிவா வழங்கினார்.
நெல்லித்தோப்பு தொகுதி, சக்தி நகர் கிளை அவைத்தலைவர் சேனாதிபதி, கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு, மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தார். அவரது நிலை குறித்து தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு, மாநில அமைப்பாளர் சிவா கொண்டு சென்றார்.
இதையடுத்து, கட்சி தலைமையில் இருந்து கருணாநிதி அறக்கட்டளை நிதியின் கீழ் மருத்துவ நிதி உதவியாக ரூ. 25,000 காசோலை வழங்கப்பட்டது.
அந்த காசோலையை புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா, உடல்நிலை பாதிக்கப்பட்ட சேனாதிபதி குடும்பத்தாரிடம் வழங்கினார். இதில், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், கோபால், தொகுதி செயலாளர்கள் நடராஜன், சக்திவேல், சவுரிராஜன், சக்தி நகர் கிளை செயலாளர்கள் செல்வம், கண்ணன், மாநில தொண்டரணி துணை அமைப்பாளர் கருணாகரன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.