மருத்துவ சங்க புதுச்சேரி கிளை பொறுப்பாளர்கள் பதவியேற்பு
மருத்துவ சங்க புதுச்சேரி கிளை பொறுப்பாளர்கள் பதவியேற்பு
ADDED : பிப் 09, 2026 04:55 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளையின் புதிய அலுவலக பொறுப்பாளர்களின் பதவியேற்பு விழா நடந்தது.
புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் அருகில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட ரோட்டரி கவர்னர் வைத்தியநாதன், கலந்து கொண்டு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். இதில் தலைவர் சுதாகர், பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன், பொருளாளர் சிவராமகிருஷ்ணன், நிர்வாகிகள் மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
