ADDED : அக் 27, 2024 04:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அடுத்த மணவெளி புருேஷாத்தமன் சமூதாய நலக்கூடத்தில், இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். பிவெல் மற்றும் ஸ்மைல் குளோ மருத்துமனைகளின் மருத்துவர்கள், கண், பல் மற்றும் பொது மருத்துவ சிகிச்சை அளித்தனர்.
கண் மற்றும் நோய்கள் பற்றி மருத்துவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில், பா.ஜ., முன்னாள் தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், தங்கதுரை, குமரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.