ADDED : நவ 13, 2024 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : தட்டாஞ்சாவடி, தாகூர் நகர், டான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நேற்று மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை புதுச்சேரி மாநில இளைஞர் காங்., டான் போஸ்கோ முன்னாள் மாணவர் சங்கம் மற்றும் லட்சுமி நாராயணா மருத்துவ அறிவியல் கழகம் இணைந்து நடத்தியது.
நிகழ்ச்சியை வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இதில் மாநில இளைஞர் காங்., தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை தாங்கினார். டான் போஸ்கோ பள்ளி முதல்வர் தேவ அன்பு வரவேற்றார். தாளாளர் கில்பர்ட் ஜெயராஜ், துணை முதல்வர் முடியப்பன், சிறப்பு விருந்தினர்களுக்கு, சால்வை அணிவித்தனர். முகாம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

