ADDED : செப் 30, 2025 06:38 AM

திருக்கனுார் : மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் இருவார துாய்மை விழாவையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் திருக்கனுாரில் நேற்று நடந்தது.
புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளில் இரு வார துாய்மை விழா நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
திருக்கனுார் சுப்பிரமணிய பாரதியார் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சிறப்பு மருத்துவ முகாமை, ஆணையர் எழில்ராஜன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.
முகாமில், தனியார் மருத்துவமனையை சார்ந்த மருத்துவ குழுவினர் பங்கேற்று, பொது மருத்துவம், பல் பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளித்தனர். இதில், கொம்யூன் பஞ்சாயத்தில் பணிபுரியும் ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள மற்றும் பொதுமக்கள் கலந்து, உடல் மற்றும் பல் பரிசோதனை செய்து கொண்டனர்.
முகாமில், உதவி பொறியாளர் மல்லிகார்ஜூனா, சச்சிதானந்தம் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.