/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவ கல்லுாரி ஊழியர் நெஞ்சு வலியால் மரணம்
/
மருத்துவ கல்லுாரி ஊழியர் நெஞ்சு வலியால் மரணம்
ADDED : ஜன 19, 2025 05:49 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் மருத்துவக்கல்லுாரி ஊழியர் நெஞ்சு வலி காரணமாக இறந்தார்.
தட்டாஞ்சாவடி, வி.வி.பி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார், 46. இவர் தனியார் மருத்துவக்கல்லுாரியில், எலக்டரிகல் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவகாரத்து பெற்று, தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
இவருக்கு ரத்த அழுத்தம் பிரச்னை இருந்துள்ளது. இதன் காரணமாக மாத்திரை சாப்பிட்டு வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்கு சென்று மாலை வீடு திரும்பினார்.
அன்று இரவு வழக்கம் போல பெற்றோருடன் சாப்பிட்டு, தனது அறையில் துாங்க சென்றார். நேற்று அதிகாலை திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து குடும்பத்தினர் மற்றும் உறவினர் அவரை உடனடியாக கதிர்காமம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து டி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.