/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பாலாஜி வித்யா பீத் பல்கலையில் மருத்துவ மாநாடு
/
பாலாஜி வித்யா பீத் பல்கலையில் மருத்துவ மாநாடு
ADDED : பிப் 06, 2025 07:06 AM

பாகூர்; புதுச்சேரி பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், மூன்றாவது சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாட்டை, கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.
புதுச்சேரி கிருமாம்பாக்கம் அடுத்த பிள்ளையார்குப்பம் பாலாஜி வித்யா பீத் நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்து லீட்ஸ் பல்கலைக்கழகம் இணைந்து, மூன்றாவது சர்வதேச சுகாதார மற்றும் ஆராய்ச்சி மாநாட்டினை நடத்தி வருகிறது.
பல்கலைக்கழக கலையரங்கில் நடந்த விழாவில், புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்தார். தென்னிந்தியா பிரிட்டீஷ் கவுன்சில் இயக்குனர் ஜானக புஷ்பநாதன் வாழ்த்தி பேசினார். பாலாஜி வித்யா பீத் நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் மாநாட்டு மலரை வெளியிட்டார். இதில், துணை வேந்தர் நிகர் ரஞ்சன் பிஸ்வாஸ், மாநாடு ஒருங்கிணைப்பாளர் பிரித்வி சுகுமார் மற்றும் இந்தியா, இங்கிலாந்து, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து வல்லுனர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
முன்னதாக, மாநாடு குழு தலைவர் டாக்டர் நிர்மல்குமார் வரவேற்றார். செயலாளர் டாக்டர் பஜனிவேல், ஆஷா கே நாயர் ஆகியோர் நன்றி கூறினர்.