/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நகராட்சி ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை
/
நகராட்சி ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை
ADDED : பிப் 16, 2025 03:35 AM

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லுாரியில் உழவர்கரை நகராட்சி ஊழியர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
'உலக வாய் மற்றும் முகம் சீரமைப்பு நிபுணர் தின விழா' கொண்டாடினர். விழாவை முன்னிட்டு உழவர்கரை நகராட்சி ஊழியர்களுக்கு வாய் புற்று நோய் பரிசோதனை மற்றும் பல் மருத்துவ முகாம் நடந்தது.
முகாமில் நகராட்சி ஊழியர்கள் 125க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜன், வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, பல் மருத்துவ கல்லுாரி முதல்வர் செந்தில்நாதன், துணை முதல்வர்கள் யுவராஜ், சுதாகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.