/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
/
அரசு மருத்துவமனையில் மருத்துவ கருத்தரங்கு
ADDED : ஜன 30, 2025 06:44 AM

புதுச்சேரி: இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில்,நடந்த மருத்துவ கருத்தரங்கில், மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.
மருத்துவமனையில், நடந்த கருத்தரங்கில், மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் தலைமை தாங்கினார்.
சென்னை காவேரி மருத்துவமனை மூளை மற்றும் தண்டுவட நரம்பியல் நிபுணர் சதீஷ் கிரஹதுரை, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் சதீஷ் கண்ணன் ஆகியோர், பக்கவாத நோய்க்கான, நவீன சிகிச்சை முறைகள் குறித்து, விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரிஷமி முனிஸா பேகம்,மக்கள் தொடர்பு அதிகாரி ஆத்மநாதன், குறை தீர்ப்பு அதிகாரி ரவி, மருத்துவர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.