/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குருவிநத்தம் அரசு பள்ளியில் மருத்துவக் கருத்தரங்கு
/
குருவிநத்தம் அரசு பள்ளியில் மருத்துவக் கருத்தரங்கு
குருவிநத்தம் அரசு பள்ளியில் மருத்துவக் கருத்தரங்கு
குருவிநத்தம் அரசு பள்ளியில் மருத்துவக் கருத்தரங்கு
ADDED : நவ 09, 2024 07:23 AM

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், மருத்துவக் கருத்தரங்கம் நடந்தது.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமையாசிரியர் கோமதி தலைமை தாங்கினார். நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார். பாகூர் அரசு மருத்துவமனை பொது மருத்துவர் எழிலரசி கலந்து கொண்டு 'எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றியும்', பல் மருத்துவர் தேவி 'பல் பாதுகாப்பு குறித்தும்', ஹோமியோபதி மருத்துவர் நித்யா 'பக்க விளைவுகள் இல்லாத இயற்கை மருத்துவம்' குறித்தும் பேசினர்.
நிகழ்ச்சியில் 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்றுப் பயனடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பட்டதாரி ஆசிரியர்கள் கோமளா, சங்கர்தேவி, செவிலியர் மங்கவரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.