ADDED : ஜூலை 27, 2025 07:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் மருத்துவர்களுக்கான தொடர் மருத்துவக் கருத்தரங்கு நடந்தது.
கருத்தரங்கில் சென்னை, கிளினிக்கல் மருத்துவமனை சிறுநீரியல் சிறப்பு நிபுணர் முருகானந்தம் கலந்து கொண்டு சிறுநீரியல் அறுவை சிகிச்சையில் ரோபோட்டிக் அறுவை சிகிச்சையின் பயன்பாடு குறித்து விளக்கம் அளித்தார்.
இதில், உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி ஆத்மநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி குணேஸ்வரி, குறை தீர்ப்பு அதிகாரி ரவி மற்றும் அனைத்து மருத்துவ வல்லுநர்கள், மருத்துவ அதிகாரிகள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரியல் துறைத் தலைவர் சுதாகர் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.