ADDED : நவ 12, 2026 11:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: மதுபாரில் ஏற்றபட்ட தகராறில் மருத்துவ மாணவரை கத்தியால் வெட்டிய கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த 21வயது மாணவர் தனியார் மருத்துவ கல்லுாரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், நேற்று (நவ.,11) மாலை தனது நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். அங்கு அவர்களுக்கும் எதிரே மது குடித்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
பின் மாணவர் திருபுவனை மேம்பாலம் அருகில் நின்று கொண்டிருந்தார். அங்கு வந்த அந்த கும்பல் அந்த மாணவரை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
