தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை

மருத்துவ மாணவர் கடலில் தற்கொலை


ADDED : ஜன 31, 2024 01:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 31, 2024 01:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:புதுச்சேரியில்எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி கடற்கரை அம்பேத்கர் மணிமண்டபம் எதிரே நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு, வாலிபர் உடல் கரை ஒதுங்கியது. தகவலறிந்த பெரியகடை போலீசார் சென்று, வாலிபர் உடலை மீட்டு விசாரித்தனர்.

கடலுார் மஞ்சக்குப்பம், ஆல்பேட்டை காமராஜர் நகரைச் சேர்ந்த கவுதமன் மகன் நிதிஷ், 23; என்பதும், பிள்ளையார்குப்பம் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படித்த நிதிஷ் என்பது தெரிந்தது. பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு நேற்று முன் தினம், தேர்வு நடந்தது. அதற்காக வழக்கம்போல் காலை 7:45 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். அவரது கல்லுாரி பை, அம்பேத்கர் மணிமண்டபம் அருகே உள்ள உணவகத்தில் கிடந்தது.

தேர்வு பயத்தில் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us