/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகப்பேறு பாதிப்பு குறித்த மருத்துவ கருத்தரங்கம்
/
மகப்பேறு பாதிப்பு குறித்த மருத்துவ கருத்தரங்கம்
ADDED : நவ 13, 2024 05:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி, ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் சார்பில் பெண்களுக்கான மகப்பேறு பாதிப்புகள் குறித்த மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.
மருத்துவ கண்காணிப்பாளர் அய்யப்பன் வரவேற்றார். மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவன மயக்கவியல் துறை பேராசிரியர் ஹோமந்த் குமார் கலந்து கொண்டு, பெண்களுக்கு மகப்பேறு காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் குறித்தும், அதற்கான சிகிச்சை முறைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவத்துறை டாக்டர் வல்சா டைனா நன்றி கூறினார்.