/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., முகவர்கள் கூட்டம்
/
உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., முகவர்கள் கூட்டம்
ADDED : நவ 03, 2025 04:48 AM

புதுச்சேரி: உருளையான்பேட்டை தொகுதி பாகமுகவர்கள் கூட்டம், தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தீவிர சிறப்பு வாக்காளர் திருத்த பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற உள்ளது. அதனையொட்டி நேற்று அண்ணா சாலையில் உருளையான்பேட்டை தொகுதி பாக முகவர்கள் கூட்டம், தி.மு.க., அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டு, பாகமுகவர்கள், கிளை செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கினர்.
தி.மு.க., மாநில துணை அமைப்பாளர் தைரியநாதன், பொதுக்குழு உறுப்பினர் மாறன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத் தலைவர் ஆதிநாராயணன், துணை செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் சசிகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

