/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அவ்வை நகரில் மின் இணைப்பு அதிகாரியுடன் எம்.எல்.ஏ., சந்திப்பு
/
அவ்வை நகரில் மின் இணைப்பு அதிகாரியுடன் எம்.எல்.ஏ., சந்திப்பு
அவ்வை நகரில் மின் இணைப்பு அதிகாரியுடன் எம்.எல்.ஏ., சந்திப்பு
அவ்வை நகரில் மின் இணைப்பு அதிகாரியுடன் எம்.எல்.ஏ., சந்திப்பு
ADDED : நவ 06, 2024 05:25 AM

புதுச்சேரி : அவ்வை நகரில் மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மின்துறை அதிகாரியை சந்தித்து பேசினார்.
உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி மின்துறை முதன்மை பொறியாளர் கனியமுதனை நேரில் சந்தித்து பேசினார். அப்போது, அவ்வை நகர் பாதாள மின் இணைப்பு ஏற்படுத்தி தர வேண்டுமென அறிவுறுத்தினர். அதற்கு, பாதாள வழி மின் இணைப்பு கொண்டு வந்தால் அடிக்கடி சாலை தோண்ட வேண்டி இருக்கும். இதனால், மக்களுக்கு பாதிப்புகள் ஏற்படும். அதற்கு பதிலாக வான்வழித் தொகுக்கப்பட்ட கேபிள்கள் மூலம் மின் இணைப்பு ஏற்படுத்தி தரலாம் என மின்துறை முதன்மை அதிகாரி தெரிவித்தார்.
பின்னர், பொது மக்கள் கருத்தை கேட்டு, அவர்களின் விருப்பப்படி அப்பகுதியில் விரைவில் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கும் படி எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.
சந்திப்பின் போது, தி.மு.க., தொகுதி செயலாளர் சக்திவேல், துணை செயலாளர் ராஜி, நிசார், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.