/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாய் சரவணன்குமார் சந்தோஷ்ஜியுடன் சந்திப்பு
/
சாய் சரவணன்குமார் சந்தோஷ்ஜியுடன் சந்திப்பு
ADDED : நவ 27, 2024 04:58 AM

புதுச்சேரி: டில்லியில் முகாமிட்டுள்ள அமைச்சர் சாய் சரவணன்குமார் நேற்று, பா.ஜ., மேலிட பார்வையாளரான சந்தோஷ் ஜியை சந்தித்து பேசினார்.
தன்வசம் இருந்த இலாகாக்கள் பறிக்கப்பட்டதால், அதிருப்தியடைந்த அமைச்சர் சாய் சரவணன்குமார், பதவியை மீண்டும் பெற்றுத் தர வேண்டி கவர்னரிடம் மனு கொடுத்தார்.
மேலும், அமைச்சரவையில் தனக்கு கடைசி இடம் தானா என கேள்வி எழுப்பி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் அவசரமாக டில்லி சென்றார். அங்கு அவர் நேற்று, புதுச்சேரி மேலிட பொறுப்பாளரான சந்தோஷ் ஜி, மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மக்வால் உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளது, புதுச்சேரி பா.ஜ., வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

