/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரான்ஸ் அமைச்சர் கவர்னருடன் சந்திப்பு
/
பிரான்ஸ் அமைச்சர் கவர்னருடன் சந்திப்பு
ADDED : நவ 30, 2024 04:36 AM

புதுச்சேரி : புதுச்சேரி வந்துள்ள பிரான்ஸ் அமைச்சர் தலைமையிலான குழுவினர் கவர்னர் கைலாஷ்நாதனை சந்தித்து பேசினர்.
அரசு முறை பயணமாக புதுச்சேரி வந்துள்ள பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு வாழ் பிரஞ்சு குடிமக்களுக்கான அமைச்சர் சோபி பிரைமாஸ் தலைமையிலான குழுவினர், மரியாதை நிமிர்த்தமாக நேற்று ராஜ் நிவாஸ் வந்தனர்.
பிரஞ்சு குழுவினரை கவர்னர் கைலாஷ்நாதன் வரவேற்று கலந்துரையாடினார்.
இக்குழுவில் இந்தியாவுக்கான பிரஞ்சு துாதர் தேர்ரி மேதோ, மண்டல பொருளாதார சேவைப் பிரிவு தலைவர் பெனோ கவுதெ, சென்னை புதுச்சேரிக்கான பிரஞ்சு துாதரக ஜெனரல் எதின் ரெனால்ட் பிகே, துணை துாதரக ஜெனரல் ஜின் பிலிப் ஹீதர் இடம்பெற்று இருந்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை செயலர் சரத் சவுக்கான், கவர்னர் செயலர் நெடுஞ்செழியன் உடனிருந்தனர்.