/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நாளை மெகா இசை நிகழ்ச்சி
/
புதுச்சேரியில் நாளை மெகா இசை நிகழ்ச்சி
ADDED : மார் 01, 2024 03:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் தில்லானா, தில்லானா மெகா இசை கச்சேரி நிகழ்ச்சி, நாளை 2ம் தேதி நடக்கிறது.
புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில், தில்லானா தில்லானா மெகா இசை கச்சேரி நிகழ்ச்சி, நாளை 2ம் தேதி பழைய துறைமுக வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழுவுடன் இணைந்து பிரபல பாடகர் மனோ மற்றும் இசை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதற்கு அனுமதி இலவசம்
இந்நிகழ்ச்சியை, பாண்டி ராம் சில்க்ஸ், தங்க மாளிகை, தினமலர், யூ அண்ட் மீ மீடியாஸ், பிஆர்டி 70 இணைந்து வழங்குகின்றனர்.
ஏற்பாடுகளை யாக்டோ ஈவென்ட் செய்துள்ளது.

