/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கறவை மாடு லோனில் மெகா மோசடி அம்பலம்
/
கறவை மாடு லோனில் மெகா மோசடி அம்பலம்
ADDED : அக் 05, 2024 11:14 PM
மாநிலத்தில் பால் கொள்முதல் உற்பத்தியை பெருக்க, கறவை மாடுகள் வாங்க அரசு கால்நடை பராமரிப்பு துறை மூலம் 50 சதவீத மானியத்தில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் பெற்றவர்கள், மாடுகளை வாங்கி கூட்டுறவு பால் சங்கத்தில் பால் ஊற்ற வேண்டும். அவ்வாறு செய்தால், கூட்டுறவு பால் சங்கங்களில் பால் கொள்முதல் அதிகரிக்க வேண்டும்.
இத்திட்டத்தில், 3 மாதங்களுக்கு முன் மாநிலத்தின் மேற்கு எல்லையோர தமிழகத்தை ஓட்டியுள்ள கிளை மருத்துவமனை மூலம் 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டது. கடன் வழங்கி 3 மாதங்களுக்கு மேலாகியும், கூட்டுறவு பால் சங்கத்தில் கொள்முதல் அதிகரிக்கவில்லை
இதுகுறித்து விசாரிக்கையில், கறவை மாடுகள் வாங்க கடன் வாங்கியவர்கள் பலர் மாடுகளை வாங்காமல், அரசு வழங்கும் 50 சதவீத மானியத்திற்காக மாட்டுமே கடன் வாங்கி மோசடி செய்திருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த மோசடிக்கு, துறை அதிகாரிகள், ஊழியர்களும் உடந்தையாக இருந்திருப்பதுதான் வேதனையாக உள்ளது.