/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
/
மணக்குள விநாயகர் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
ADDED : செப் 27, 2025 02:37 AM

புதுச்சேரி : புதுச்சேரி மணக்குள வி நாயகர் பொறியியல் கல்லுாரியில் எஸ்.எம்.வி., ஐ.ஏ.எஸ். அகாடமி துவக்க விழா மற்றும் கிங்மேக் கர்ஸ் அகாடமி அமைப்போடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது.
மணக்குள விநாயகர் கல் வி அறக்கட்டளை தலைவர் தனசேகரன் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார். கல்லுாரி இயக்குநர் வெங்கடாசலபதி வரவேற்றா ர். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணை செயலாளர் வேலாயுதம் முன்னிலை வகித்தனர்.
தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமி டீன்கள் அன்புமலர், அறிவழகர், வேல்முருகன், கைலாசம், முகம்மது யாசின், எஸ்.எம்.வி., பள்ளி முதல்வர் அனிதா உட்பட பலர் பங்கேற்றனர்.
நிகழ்வில், கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ்., அகாடமி நிறுவன தலைவர் பூமிநாதன் இந்திய குடிமை பணித்தேர்வு குறித்து பேசுகையில், 'ஐ.ஏ.எஸ் மற்றும் சிவில் சர்வீஸ் தேர்வு என்றால் என்ன, அதை எழுதுவதற்கு தகுதியுடையோர் யார், முதன்மை மற்றும் இரண்டாம் நிலை தேர்விற்கு தயாராகும் முறை குறித்தும், படிக்கும் காலத்திலேயே இப்பயிற்சியைப் பெற்று வெற்றி பெறும் மாணவர்கள் இளம் வயதிலேயே ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளாகப் பணியாற்றும் வாய்ப்பை வழங்குகிறது' என்றார்.
சிறப்பு விருந்தினராக, முன்னாள் போலீஸ் எஸ்.பி., கலியமூர்த்தி மற்றும் ஐ.ஏ.எஸ்., பயிற்சி பெற விண்ணப்பித்துள்ள பொறியியல் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
எஸ்.எம்.வி., ஐ.ஏ.எஸ்., அகாடமி லோகோ வெளியீடப்பட்டது. ஏற்பாடுகளை கல்லுாரி அறிவியல் துறை தலைவர் ராஜாராம், ஆங்கில துறை தலைவர் இளமாறன், பொறியியல் கல்லுாரி பயோமெடிக்கல் துறை தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் முத்துலட்சுமி நன்றி கூறினார்.