/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனநலம் பாதித்த பெண் துாக்கிட்டு தற்கொலை
/
மனநலம் பாதித்த பெண் துாக்கிட்டு தற்கொலை
ADDED : நவ 18, 2024 07:03 AM
புதுச்சேரி; கருவடிக்குப்பம், கால்நடை மருத்துவமனை வீதியை சேர்ந்தவர் சிரஞ்சீவி, 32; பெயிண்டர். இவரது மனைவி அஸ்வினி, 28. ஒரு மகன் உள்ளார்.
அஸ்வினி கடந்த பிப்ரவரி மாதம் கீழே விழுந்து காயமடைந்து, சற்று மனநிலை பாதிக்கப்பட்டு, காலாப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.உடல்நலம் கருதி கருவடிக்குப்பம் முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தாய் வீட்டில் இருந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு சிரஞ்சீவி, அஸ்வினிக்கு மொபைல்மூலம் பிறந்தநாளை முன்னிட்டு துணி எடுக்க செல்ல தயாராக இருக்குமாறு கூறியுள்ளார்.மாலை 6:00 மணிக்கு மாமியார் வீட்டிற்கு சிரஞ்சீவி வந்தபோது, வீட்டின் முதல் மாடியில் உள்ள ஊஞ்சல் கொக்கியில் அஸ்வினி துாக்கில் தொங்கினார்.
அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அஸ்வினி இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.