ADDED : நவ 27, 2024 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : அரியூரில் மனநலம் பாதிக்கப்பட்டவர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுச்சேரி, அரியூர் பகுதியை சேர்ந்தவர் முருகன், 63. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தம்பி ஏழுமலை, 53. மனநலம் பாதிக்கப்பட்டவர்.கடந்த மாதம் ஏழுமலை திடீரென கத்தியால் குத்தி கொண்டார். ஏழுமலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை முடிந்து வீட்டில் இருந்து வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் ஏழுமலை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.