ADDED : அக் 14, 2025 06:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கடற்கரை சாலையில் நடந்த உலக மனநல விழிப்புணர்வு விழாவில், பங்கேற்க அழைத்து வரப்பட்ட மனநல பாதிக்கப்பட்டவர் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அரியாங்குப்பம், மணவெளியை சேர்ந்தவர் இளவழகன், 50; அரிச்சுவடி மனநல மையம் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் கடற்கரை சாலை, காந்தி திடலில் நடந்த உலக மனநல மாத விழிப்புணர்வு விழாவில், பங்கேற்க மனநல பாதிக்கப்பட்ட 10 பேரை அழைத்து வந்துள்ளார்.
அதில், மனநல பாதிக்கப்பட்ட தேவநாதன், 45; என்பவர் திடீரென காணாவில்லை. இதையடுத்து, பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.இதுகுறித்து பெரியக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, காணாமல் போன தேவநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர்.