/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வானிலை ஆய்வு மையம்: பொதுமக்கள் பார்வை
/
வானிலை ஆய்வு மையம்: பொதுமக்கள் பார்வை
ADDED : ஜன 14, 2025 11:57 PM

புதுச்சேரி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது ஆண்டை முன்னிட்டு, லாஸ்பேட்டை வானிலை ஆய்வு மையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
இந்திய வானிலை ஆய்வு மைய கடந்த 1875ம் ஆண்டு துவங்கப்பட்டது. சென்னையில் மண்டல ஆய்வு மையம் கடந்த 1945ம் ஆண்டு துவங்கியது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150 வது ஆண்டு மற்றும் சென்னை மண்டல ஆய்வு மையத்தின் , 80 ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, வானிலை ஆய்வு மைய செயல்பாடுகள் மக்கள் அறிந்து கொள்ளும் வகையில், தமிழகம் புதுச்சேரியில் உள்ள வானிலை ஆய்வு மையம், லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலை, பாபு ஜெகஜீவன்ராம் சிலை அருகில் உள்ள வானிலை ஆராய்ச்சி மையத்திற்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு வைக்கப்பட்டு இருந்த வானிலை ஆய்வு தொடர்பான சாதனங்களை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். வானிலை ஆய்வு தொடர்பான விளக்கங்களை கேட்டு பெற்றனர். இன்று 15ம் தேதியும் வானிலை ஆய்வு மையம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுகிறது.

