/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை : காரைக்காலில் 4 பேர் கைது
/
மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை : காரைக்காலில் 4 பேர் கைது
மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை : காரைக்காலில் 4 பேர் கைது
மெத்தபெட்டமைன் போதை பொருள் விற்பனை : காரைக்காலில் 4 பேர் கைது
ADDED : டிச 02, 2025 04:34 AM
காரைக்கால்: காரைக்காலில் தடைசெய்யப்பட்ட மெத்தபெட்டமையின் போதை பொருள் விற்பனை செய்த நான்கு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் திருப்பட்டினம் நிரவி தொகுதிக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக நிரவி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் சப் இன்ஸ்பெக்டர் குமரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விழிதியூர் மேலஓடுதுறை தடுப்பணை அருகில் சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த 4 பேரை பிடித்து விசாரித்து, சோதனை செய்தனர். இதில் திருப்பட்டினம் பெரிய பள்ளி தெருவை சேர்ந்த முகமது இப்ராஹிம் மகன் முகமது ரிஷ்வான், 25; நாகை மாவட்ட நாகூர் ஜடானா ஹாஜியார் தெருவை சேர்ந்த அப்துல் ஃபதாஹ் மகன் ஃபஹருதீன் ஃபர்வாஸ், 21; நாகூர் தெற்கு தெருவை சேர்ந்த அபுபக்கர் மகன் முகமது, இமாரன், 21; நாகூர் புதுமனை தெருவை சேர்ந்த அப்துல் காதர் மகன் ரஷித், 26; ஆகிய நான்கு பேரை நிரவி போலீசார் சோதனை செய்ததில் தடைசெய்யப்பட்ட மெத்தபெட்டமையின் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது.
போலீசார் நான்கு பேர் மீது வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.பின்னர் அவரிடம் ரூ.5ஆயிரம் மதிப்புள்ள 490மில்லி கிராம் போதை பொருள், மூன்று பைக், நான்கு மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

