/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
எம்.ஜி.ஆர்.,- ஜெ., படங்களுடன் போஸ்டர் பா.ஜ., அதிரடி: அ.தி.மு.க., அதிர்ச்சி
/
எம்.ஜி.ஆர்.,- ஜெ., படங்களுடன் போஸ்டர் பா.ஜ., அதிரடி: அ.தி.மு.க., அதிர்ச்சி
எம்.ஜி.ஆர்.,- ஜெ., படங்களுடன் போஸ்டர் பா.ஜ., அதிரடி: அ.தி.மு.க., அதிர்ச்சி
எம்.ஜி.ஆர்.,- ஜெ., படங்களுடன் போஸ்டர் பா.ஜ., அதிரடி: அ.தி.மு.க., அதிர்ச்சி
ADDED : மார் 03, 2024 04:59 AM

புதுச்சேரி: எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி லோக்சபா தேர்தலை பிரசாரத்தை புதுச்சேரி பா.ஜ., துவக்கியுள்ளது, அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் இணைந்து தேர்தலை சந்தித்த அ.தி.மு.க.,-பா.ஜ.,கூட்டணியில் கடந்தாண்டு செப்டம்பரில் விரிசல் ஏற்பட்டது. பா.ஜ.,வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக அ.தி.மு.க., அதிரடியாக அறிவித்தது.
லோக்சபா தேர்தலை சந்திப்பதற்காக பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதற்கிடையில், எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாள் விழாவையொட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, 'எம்.ஜி.ஆர்., தொலைநோக்கு சிந்தனை உடைய தலைவராக இருந்தார். தலைவராகவும், முதல்வராகவும் மக்கள் நலனுக்காக அயராது உழைத்த அவர் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பங்காற்றினார்' என, புகழாரம் சூட்டினார்.
அடுத்ததாக, திருப்பூர் பல்லடத்தில் 'என் மண் என் மக்கள்' யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர்.,- ஜெயலலிதா படங்களுடன் போஸ்டர்கள் ஒட்டி லோக்சபா தேர்தலை பிரசாரத்தை பா.ஜ., துவக்கியுள்ளது. இந்த போஸ்டர்களில் பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி ஆகியோரின் படங்களும் இடம் பெற்றுள்ளன.
எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா படங்களுடன் பா.ஜ.,வினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளது, அ.தி.மு.க.,வினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

