/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நள்ளிரவில் மின்தடை: களத்தில் இறங்கிய காங்., மூத்த துணை தலைவர் தேவதாஸ்

ADDED : மார் 08, 2026 04:25 AM

புதுச்சேரி: நள்ளிரவில் மின்தடை சீராகும் வரை களத்தில் நின்ற காங்., மூத்த தலைவர் தேவதாஸிற்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
காமராஜர் நகர் தொகுதி, கிருஷ்ணா நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:00 மணியளவில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால், வெப்பம் மற்றும் புழுக்கத்தால் முதியவர்கள், குழந்தைகள் என, அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தகவலறிந்த காமராஜர் நகர் தொகுதி பொறுப்பாளரும், காங்., மூத்த துணைத் தலைவருமான தேவதாஸ், உடனடியாக கிருஷ்ணா நகர் பகுதிக்கு சென்றார். மின்தடை குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தவர், மின் துறை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பேசினார்.
அவரது கோரிக்கையை ஏற்று, மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, பழுது சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் சீரானது. பணிகள் முடியும் வரை அதிகாரிகளுடனேயே இருந்து தேவதாஸ் அவர்கள் ஒத்துழைப்பு வழங்கினார்.
நள்ளிரவில் மக்கள் குறை தீர்க்க விரைந்து வந்த தேவதாஸின் செயலைக் கண்ட கிருஷ்ணா நகர் வாசிகள் நெகிழ்ச்சியடைந்தனர். அவருக்கு நன்றி தெரிவித்தனர்.