/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மைக் பிரசாரம்
/
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மைக் பிரசாரம்
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மைக் பிரசாரம்
நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மைக் பிரசாரம்
ADDED : ஏப் 05, 2025 04:28 AM

புதுச்சேரி: புதுச்சேரி மிஷன் வீதியில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலை மத்திய பிரிவு சார்பில் மைக் பிரசாரம் செய்யப்பட்டது.
புதுச்சேரி நகரப் பகுதி வீதிகளில் சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்பவர்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் வாய்க்கால்கள் மீது அமைக்கப்படும் கட்டடங்களின் படிக்கட்டுகளால் வாய்க்கால்களை சுத்தம் செய்யும் பணி நடைபெறாமல் முடங்கி விடுகிறது.
அதையடுத்து, கட்டடம் மற்றும் சாலை மத்திய பிரிவு செயற்பொறியாளர் சீனிவாசன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் தலைமையில் மிஷன் வீதி, எஸ்.வி.பட்டேல் சாலை அண்ணா சாலை, மறைமலையடிகள் சாலை, காராமணிக்குப்பம், முத்தியால்பேட்டை மகாத்மா காந்தி வீதியில் நடைபாதை ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றப்பட உள்ளது.
அதையொட்டி நேற்று அப்பகுதிகளில் பொதுப்பணித்துறை ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வலியுறுத்தி மைக் பிரசாரம் செய்தனர்.

