ADDED : டிச 08, 2025 04:44 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: அரியாங்குப்பம் ஐயப்பன் கோவிலில், பால் குடம் ஊர்வலம் நடந்தது.
கடலுார் சாலையில் உள்ள ஐயப்பன் கோவிலில், மகோற்சவ விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி, கொடியேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து, 4ம் தேதி, சிறப்பு பஜனையும், 5ம் தேதி புஷ்ப அலங்காரத்துடன் சுவாமி வீதியுலா நடந்தது.தொடர்ந்து நேற்று முன்தினம் (6ம் தேதி) நோணாங்குப்பம் சங்கராபரணி ஆற்றில் ஆராட்டு நிகழ்ச்சியை அடுத்து, முக்கிய நிகழ்வான, நேற்று 108 நெய் தேங்காய் பால்குடம் ஊர்வலம் நடந்தது.
