/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மில் தொழிலாளியிடம் ரூ.20 லட்சம் மோசடி; சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
/
மில் தொழிலாளியிடம் ரூ.20 லட்சம் மோசடி; சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
மில் தொழிலாளியிடம் ரூ.20 லட்சம் மோசடி; சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
மில் தொழிலாளியிடம் ரூ.20 லட்சம் மோசடி; சைபர் கிரைம் மோசடி கும்பல் கைவரிசை
ADDED : ஜூலை 25, 2025 11:19 PM
புதுச்சேரி; ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வதற்காக வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து ரூ. 20 லட்சத்தை மில் தொழிலாளி மோசடி கும்பலிடம் இழந்துள்ளார்.
தருமாபுரி, தனகோடி நகரை சேர்ந்தவர் தயாளன், 52; கூட்டுறவு நுாற்பாலை தொழிலாளி. இவரது மொபைல் எண்ணை மர்மநபர், கடந்த ஜூன் மாதம் ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான வாட்ஸ் ஆப் குரூப் ஒன்றில், இணைத்தார்.
அதில், ஆன்லைன் வர்த்தகம் தொடர்பாக தினசரி வகுப்புகள் நடந்துள்ளது. இதை நம்பிய அவர் பல்வேறு தவணைகளாக ரூ. 19 லட்சத்து 95 ஆயிரம் வாட்ஸ் ஆப் குரூப்பில் தெரிவிக்கப்பட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் வங்கி கணக்கிற்கு அனுப்பினார்.
அவர் முதலீடு செய்த பணத்திற்கான லாபம் தொகையாக ரூ. 89 லட்சத்து 3 ஆயிரத்து 520 கிடைத்துள்ளதாக காட்டியுள்ளது. பின், அந்த பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.
இது குறித்து சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'சமீப காலமாக வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களில் வரும் லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் ஒரு குழுவில் சேர்த்து, அதிக லாபம் கிடைக்கும் என கூறி, தனியாக அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி கொடுக்கின்றனர். அந்த செயலியின் மூலம் முதலில் குறைவான பணத்தை முதலீடு செய்ய வைத்து பெரிய லாபம் பெற வைக்கின்றனர். இதனை நம்பி பொதுமக்கள் பெரிய தொகையை முதலீடு செய்கின்றனர். ஆனால் அந்த பணத்தை திரும்ப பெற முயலும் போது, ஜி.எஸ்.டி., செயலாக்க கட்டணம் ஆகியவற்றை செலுத்தினால் தான், பெற முடியும் என கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே, இது போன்ற விளம்பரங்கள், லிங்குகளை நம்பி யாரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்' என்றார்.