தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில்களில் மினி ைஹமாஸ் விளக்கு நாராயணசாமி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

கோவில்களில் மினி ைஹமாஸ் விளக்கு நாராயணசாமி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

கோவில்களில் மினி ைஹமாஸ் விளக்கு நாராயணசாமி எம்.எல்.ஏ., வலியுறுத்தல்


ADDED : ஆக 29, 2026 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 11:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

 புதுச்சேரி: சட்டசபை மானிய கோரிக்கையின் போது, நாராயணசாமி எம்.எல்.ஏ., பேசியதாவது:

முத்துப்பிள்ளைபாளையம், அரும்பார்த்தபுரம் மேல்நிலை குடிநீர் தொட்டியை மீண்டும் கட்ட வேண்டும். பிச்சவீரன்பேட் பகுதியில், பாதாள சாக்கடை வசதி செய்தபின், பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். 

முத்துப்பிள்ளைபாளையம், வசந்தம் நகர், திருக்குறளார் நகர் வழியாக செல்லும் வாய்க்காலில் சிமெண்ட் சிலாப் அமைக்க வேண்டும். சிவசக்தி நகர், எஸ்.எம்.எஸ்., நகர் பகுதிகளில் சாலை வசதி இல்லை. நகராட்சி மூலம் இரண்டு லோடு மண் கொண்டு வரப்பட்டது. நிதி பற்றாக்குறையால் சாலை பணியை நிறுத்தி விட்டதாக கூறுகின்றனர்.

எனவே நகராட்சிக்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும். கோவில் பகுதிகளில் மினி ைஹமாஸ் விளக்கு அமைக்க வேண்டும். முத்துபிள்ளைபாளையம் ஆரம்ப சுகாதர நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.  மூலகுளம் முதல் அரசு பொதுமருத்துவமனை வரை டெம்போ இயக்க வேண்டும். அரும்பார்த்தபுரம், மூலகுளம், உழவர்கரை அரசுப் பள்ளிகளில் மதில் சுவர் அமைக்க வேண்டும். கம்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பார்மசிஸ்ட் நியமிக்க வேண்டும். மேரி உழவர்கரையில் மீண்டும் தபால் நிலையம் அமைக்க வேண்டும். 

இவ்வாறு அவர் பேசினார்.  

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us