/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மினி மராத்தான் போட்டி பரிசளிப்பு விழா
/
மினி மராத்தான் போட்டி பரிசளிப்பு விழா
ADDED : பிப் 16, 2025 03:41 AM

புதுச்சேரி : திருக்கனுார் பிரைனி புளூம்ஸ் சர்வதேச சி.பி.எஸ்.இ., பள்ளி சார்பில் நடந்த மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
புதுச்சேரி, திருக்கனுார் பிரைனி புளூம்ஸ் சர்வதேச சி.பி.எஸ்.இ., பள்ளியில் ஆண்டுதோறும் மினி மராத்தான் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக மூன்றாம் ஆண்டு மினி மராத்தான் போட்டி நடந்தது.
இதில், புதுச்சேரி மற்றும் தமிழக பகுதியை சேர்ந்த 1300க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். துணைத் தாளாளர் திவ்யா முன்னிலை வகித்தார். மேற்கு பகுதி எஸ்.பி., வம்சித ரெட்டி கலந்து கொண்டு, மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
திருக்கனுார் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரியா, கோ- கோ சர்வதேச பயிற்சியாளர் பாக்கியலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர். பள்ளியின் முதல்வர் ஜெயசித்ரா நன்றி கூறினர்.

