/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கிருஷ்ணா நகருக்கு மீண்டும் மினிபஸ் சேவை துவக்கம்
/
கிருஷ்ணா நகருக்கு மீண்டும் மினிபஸ் சேவை துவக்கம்
கிருஷ்ணா நகருக்கு மீண்டும் மினிபஸ் சேவை துவக்கம்
கிருஷ்ணா நகருக்கு மீண்டும் மினிபஸ் சேவை துவக்கம்
ADDED : ஜன 14, 2026 06:43 AM

புதுச்சேரி: கிருஷ்ணா நகருக்கு மீண்டும் அரசு மினிபஸ் சேவை துவங்கப்பட்டுள்ளதால் காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ்க்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ண நகர் பகுதிக்கு பி.ஆர்.டி.சி., மினிபஸ் சேவை மக்கள் நலனுக்காக அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த மூன்று மாதங்களுக்கு முன், பஸ் சேவை திடீரென்று நிறுத்தப்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதையடுத்து, மினி பஸ் சேவையை மீண்டும் துவங்க வேண்டும் என, பி.ஆர்.டி.சி., இயக்குநர் அமன் சர்மாவிடம் காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸ் மற்றும் கிருஷ்ணா நகர் மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.இதையேற்று, தற்போது மீண்டும் கிருஷ்ணா நகர் பகுதிக்கு பி.ஆர்.டி.சி., மினி பஸ் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது.
இதற்காக, கிருஷ்ணா நகர் மக்கள், காங்., தொகுதி பொறுப்பாளர் தேவதாஸிற்கு நன்றி தெரிவித்தனர்.

